டிடிஎப் வாசனின் “ஐபிஎல்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘ஐபிஎல்’ படத்தில் டிடிஎப் வாசன், கிஷோர், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதால் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
டிடிஎப் வாசனின் “ஐபிஎல்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ஐபிஎல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்குகிறார். ராதா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைக்கிறார்.

பான் இந்தியன் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் கிஷோர், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

டிடிஎப் வாசன் நடித்துள்ள ஐபிஎல் படத்தின் டீசரை சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், டிடிஎப் வாசன் நடித்துள்ள ஐபிஎல் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com