''கூலி'' படத்திற்கு யு/ஏ சான்று? - கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு


U/A certificate for Coolie?
x
தினத்தந்தி 20 Aug 2025 6:00 PM IST (Updated: 20 Aug 2025 6:01 PM IST)
t-max-icont-min-icon

''கூலி'' படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

கூலி திரைப்படத்தை யு/ஏ சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘கூலி’ திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் கூலி திரைப்படத்தை ‘யு/ஏ’ சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

1 More update

Next Story