'உன்னி முகுந்தன் மார்வெல் படத்திலேயே நடிக்கலாம்'- பிரபல ஸ்டண்ட் இயக்குனர்


‘Unni Mukundan could star in a Marvel movie’: ‘Marco’ stunt director Kalai Kingson praises actor’s skills
x

'மார்கோ' படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் கலை கிங்ஸ்டன் நடிகர் உன்னி முகுந்தனை பாராட்டியுள்ளார்

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன் . இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'.

ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. உலகளவில் இப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.. இது உன்னி முகுந்தனின் முதல் ரூ. 100 கோடி திரைப்படமாகும்.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் கலை கிங்ஸ்டன் நடிகர் உன்னி முகுந்தனை பாராட்டியுள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

'உன்னி முகுந்தன், கேரள சினிமா, பாலிவுட் சினிமா என்பதையும் தாண்டி மார்வெல் படங்களிலேயே நடிக்கலாம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்கு அவரிடம் திறமை உள்ளது' என்றார்.

1 More update

Next Story