விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணைந்த "வாத்தி" பட நடிகை

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தபு நடிக்கவுள்ள பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை சம்யுக்தா இணைந்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் விடுதலை 2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.மேலும் 'கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். பான் இந்திய அளவில் தயாராக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார்.
இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. தனித்துவமான கதைத் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இந்த படத்தின் கதாபாத்திரத்தாலும், அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இந்த படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் அவரது பாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும்.
இந்நிலையில்,'வாத்தி' பட நடிகை சம்யுக்தா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.






