சிவகார்த்திகேயனுடன் எனது அடுத்த படம்...அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு


Venkat Prabhu reveals deets about his next with Sivakarthikeyan
x
தினத்தந்தி 14 July 2025 8:04 AM IST (Updated: 5 Sept 2025 11:02 PM IST)
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயனுடனான தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என்று வெங்கட் பிரபு கூறினார்.

சென்னை,

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள ''தலைவன் தலைவி'' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கந்துகொண்ட இயக்குனர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனுடனான தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என்று கூறினார்.

இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் என்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் தெரிவித்தார். முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ''தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ''மதராஸி'' திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் ''பராசக்தி'' படத்திலும் எஸ்கே நடித்து வருகிறார்.

1 More update

Next Story