`மெய்யழகன்' படத்தின் `வெறி' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு


`veri song Lyrical video from `Meiyazhagan
x
தினத்தந்தி 14 Sept 2024 9:34 PM IST (Updated: 15 Sept 2024 5:53 PM IST)
t-max-icont-min-icon

'வெறி' பாடலின் லிரிக்கல் வீடியோவை மெய்யழகன் படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'மெய்யழகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 27ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. தற்போது, படக்குழு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், இதில் இடம்பெற்றுள்ள 'வெறி' பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story