பழம்பெரும் இந்தி நடிகர் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மும்பை,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பழம்பெரும் இந்தி நடிகர் கோவர்தன் அஸ்ரானி (வயது 84). இவர் இந்தியில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்த அஸ்ரானி இன்று உயிரிழந்தார். வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக அஸ்ரானி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது. கோவர்தன் அஸ்ரானி மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






