விடாமுயற்சி படம்: சவதீகா பாடலின் ரீலோடட் வெர்ஷன் வெளியீடு

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் வருகிற 6-ந் தேதி வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் சுமார் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வருகிற 6-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து 'சவதீகா மற்றும் பத்திக்கிச்சு' என்ற 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. அதில் சவதீகா பாடல் யூடியூப் தளத்தில் தற்போது வரை 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை அனிருத் மற்றும் அந்தோணிதாசன் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது, சவதீகா பாடலின் ரீலோடட் வெர்ஷனை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. இந்த பாடலை அனிXஆண்டோ வெர்ஷன் என அறிவித்த படக்குழு, இதனை ப்யூர் வைப் மெட்டீரியல் என்றும் கூறியுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com