விஜய் ஆண்டனியின் “நூறுசாமி” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறுசாமி’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். `நான்' படம் மூலமாக நடிகராக அடையாளம் பெற்ற இவர், அடுத்தடுத்து `சலீம்', `பிச்சைக்காரன்', `சைத்தான்', `எமன்' என வெற்றி படங்களை கொடுத்தார். `கொலை', `ரத்தம்', `ஹிட்லர்' வரிசையில் சமீபத்தில் நடித்த `மார்கன்' படமும் வெற்றி பெற்றுள்ளது. இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனியின் 25-வது படமான 'சக்தித் திருமகன்' படம் சமீபத்தில் வெளியானது.
‘பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய முடிவு செய்தனர். இந்தப் படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிடப்பட்டு இருப்பதாக விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். இதனை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இப்படம் அடுத்த ஆண்டு மே 1-ம் தேதி வெளியீடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ‘நூறுசாமி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.






