நிச்சயதார்த்ததிற்கு பின்...குடும்பத்தோடு விஜய் தேவரகொண்டா செய்த செயல்...வைரல்


Vijay Deverakonda seeks Baba’s blessings in Puttaparthi
x
தினத்தந்தி 6 Oct 2025 5:44 PM IST (Updated: 6 Oct 2025 6:16 PM IST)
t-max-icont-min-icon

நேற்று விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது குடும்பத்தினர் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் தரிசனம் செய்துள்ளனர்.

சென்னை,

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனாவை சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.

இதற்கிடையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது குடும்பத்தினர் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.

விஜய் தேவரகொண்டா தற்போது தனது 14-வது படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தை ராகுல் சங்க்ரித்யன் இயக்குகிறார் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

1 More update

Next Story