'ஜனநாயகன்' - படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பும் விஜய்


Vijay returns to Chennai after completing the Jananayagan shoot
x
தினத்தந்தி 5 May 2025 9:50 AM IST (Updated: 6 May 2025 5:24 PM IST)
t-max-icont-min-icon

'ஜன நாயகன்' படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

பெரும்பாறை,

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் நடைபெற்று வந்தது. இதற்காக கடந்த 1-ம் தேதி விஜய் மற்றும் படக்குழுவினர் அந்த பகுதிக்கு சென்றனர்.

மழை பெய்ததால் அவ்வப்போது படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் திறந்த வேனில் விஜய் வந்தார். அவரை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் சாலையின் இருபுறமும் திரண்டு உற்சாகமாக கையசைத்தனர்.

'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு நேற்று மாலையுடன் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில், அங்கிருந்து இன்று மதியம் மதுரை வரும் விஜய் 2 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

1 More update

Next Story