விஜய் சேதுபதியின் "தலைவனின் தலைவி" படத்தின் "பொட்டல முட்டாயே" பாடல் வெளியீடு
விஜய் சேதுபதியின் 52-வது படத்திற்கு ‘தலைவன் தலைவி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே 19(1)(ஏ) என்ற மலையாள படத்தில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் இப்படத்திற்கு 'தலைவன் தலைவி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'தலைவன் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து சுப்லாஷினியுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்.