விஜய் பிறந்தநாள்; தாய் ஷோபா சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஷோபா சந்திரசேகர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.
இந்த நிலையில், விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க. தொண்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கொளத்தூரில் உள்ள சாய்பாபா கோவிலில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், சாமி தரிசனம் செய்தார். அங்கு 1008 சங்காபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஷோபா சந்திரசேகர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.






