பொங்கலுக்கு விஜய்யின் 'தெறி' திரைப்படம் ரீ-ரிலீஸ்


பொங்கலுக்கு விஜய்யின் தெறி திரைப்படம் ரீ-ரிலீஸ்
x
தினத்தந்தி 10 Jan 2026 5:59 PM IST (Updated: 10 Jan 2026 6:08 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

சென்னை

நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைபடத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று ரிலீஸ் ஆக இருந்த ஜன நாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை. ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள தெரி திரைப்படம் ரி - ரிலீஸ் செய்யப்படும் என்று பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் 2016ம் ஆண்டு தெரி திரைப்படம் வெளியானது. தற்போது தெரி திரைப்படம் மீண்டும் ரி- ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

1 More update

Next Story