விக்ரமின் 63வது படத்தின் அறிவிப்பு வெளியீடு


விக்ரமின் 63வது படத்தின் அறிவிப்பு வெளியீடு
x
தினத்தந்தி 30 Oct 2025 6:23 PM IST (Updated: 30 Oct 2025 6:27 PM IST)
t-max-icont-min-icon

‘சியான்’ விக்ரமின் 63வது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் இயக்குகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான்.அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். ரசிகர்களால் அன்போடு 'சியான்' என்று அழைக்கப்படுகிறார்.

படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது. இதனிடையே, 'வீர தீர சூரன்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் புது படம் தொடர்பான தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சாந்தி டாக்கீஸ் தயாரிக்க உள்ள “விக்ரம் 63” படத்தை போடி கே ராஜ்குமார் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story