கவுரி கிஷன் ‘வெயிட்’ஆக இருந்தாரா? படவிழாவில் கலகலப்பு


கவுரி கிஷன் ‘வெயிட்’ஆக இருந்தாரா? படவிழாவில் கலகலப்பு
x

நடிகை கவுரி கிஷன் அதர்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சென்னை,

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அதர்ஸ். படத்தின் கதாநாயகனாக ஆதித்யா மாதவன் கதாநாயகிகளாக கவுரி கிஷன், அஞ்சு குரியன் மற்றும் முனிஸ்காந்த், ஹரிஷ் பெராடி, நண்டு ஜெகன் மாலா, பார்வதி, வினோத் சாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில் நடக்கும் மோசடியை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. வருகிற 7-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.

இதையொட்டி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. படத்தில் டிரெய்லர் காட்சியில் ஹீரோ ஆதித்யா மாதவன் ஹீரோயின் கவுரி கிஷனை அலாக்காக தூக்கி சுற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதுகுறித்து ஆதித்யா மாதவனிடம் பாடலில் கதாநாயகி கவுரிகிஷனை தூக்கி சுற்றி வருகிறீர்களே? அவர் ரொம்ப ‘வெயிட்’ஆக இருந்தாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. கேள்விக்கு பதிலளித்த ஆதித்யா, ரொம்ப ‘வெயிட்’ஆக இல்லை. நான் ஏற்கனவே ‘ஜிம்’ உடலமைப்பு கொண்டவன். எனவே அவரது உடல் எடை எனக்கு பெரிதாக தெரியவில்லை.

தொடர்ந்து கவுரி கிஷன் பேசும்போது, 96 படத்தில் நடித்த ஜானகி கேரக்டர் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் ஜானகி கேரக்டர் போல் அமையவில்லை. இந்த படத்தில் நிறைவேறுமா? என பார்ப்போம். அதர்ஸ் படத்தில் ஹீரோ ஆதித்யா மாதவன். அவருக்கு வயது 22 என்று சொன்ன போது நம்ப முடியவில்லை. அவ்வளவு மெச்சூரிட்டியாக இருந்தார். படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. படம் நன்றாக வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story