'இன்னும் நேரம் தேவைப்படுகிறது...' - புதிய போஸ்டர் வெளியிட்ட 'தி கோட்' படக்குழு
இன்று 'தி கோட்' டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. அதனைத்தொடர்ந்து, படத்தின் டிரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதன்படி, டிரெய்லர் வெளியாகும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தி கோட் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் உள்ளன. அதனுடன், இன்று 'தி கோட்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி வெளியாகும் என்று அறிவித்திரிந்தோம். ஆனால், சிறந்த வெர்ஷனை உருவாக்க இன்னும் நேரம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு இந்த சின்ன டிரீட், விரைவில் தளபதியை திரையில் காண்போம், என்று பதிவிடப்பட்டுள்ளது.