சாய் அபயங்கரை ஏன் எல்லோரும் இசையமைக்க அழைக்கின்றனர்?- விஜய் ஆண்டனி சுவாரஸ்ய பதில்


சாய் அபயங்கரை ஏன் எல்லோரும் இசையமைக்க அழைக்கின்றனர்?- விஜய் ஆண்டனி சுவாரஸ்ய பதில்
x

சாய் அபயங்கர் இசையில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவிட்டாலும் தற்போது அவரது கைவசம் 8 படங்கள் உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி மார்கன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சக்தித் திருமகன் படத்தில் நடித்துள்ளார். இது விஜய் ஆண்டனியின் 25-வது படமாகும். அருண் பிரபு எழுதி இயக்கி இருக்கும் இந்த படம் வருகிற செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வருகிறது.

படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா விஜய் ஆண்டனி பிறந்த நாளையொட்டி நேற்றுமுன்தினம் சென்னையில் நடந்தது. விழாவில் கேக்கிற்கு பதிலாக பிரியாணியை வெட்டி தனது பிறந்த நாளை விஜய் ஆண்டனி கொண்டாடினார்.

விழாவில் விஜய் ஆண்டனியிடம் தமிழ் திரை உலகில் புதியவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் தொடர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்து கேட்டபோது, சாய் அபயங்கர் திறமையோடு வந்திருக்கிறார். அதனால் எல்லோரும் அவரை இசையமைக்க அழைக்கின்றனர். சாம் சி.எஸ்., சாய் அபயங்கர் இருவருமே திறமையானவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சாய் அபயங்கர் இசையில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவிட்டாலும் தற்போது அவரது கைவசம் 8 படங்கள் உள்ளது. இதில் சூர்யா, கார்த்தி, அல்லு அர்ஜூன் படங்களும் அடங்கும். பாடகர் திப்பு-ஹரிணி தம்பதியின் மகனாக சாய் அபயங்கர் இருப்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன என்பதுடன் இந்த விவகாரத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.சை தொடர்புபடுத்தியும் செய்திகள் வைரலாக வெளியானது. இந்நிலையில் சாம் சி.எஸ்., சாய் அபயங்கர் குறித்து விஜய் ஆண்டனி கூறிய கருத்துக்கள் வரவேற்பு பெற்று வருகிறது.

1 More update

Next Story