50 வயதை கடந்தும் நடிகை சித்தாரா தனி ஆளாக சுற்றுவது ஏன்?


50 வயதை கடந்தும் நடிகை சித்தாரா தனி ஆளாக சுற்றுவது ஏன்?
x

50 வயதை கடந்தும் நடிகை சித்தாரா திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே உள்ளார்.

சென்னை,

1986-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘காவேரி' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர், நடிகை சித்தாரா. அதன்பிறகு மலையாளத்தில் பிசியான சித்தாராவை, தனது ‘புதுப்புது அர்த்தங்கள்' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார், இயக்குனர் கே.பாலசந்தர். ‘புரியாத புதிர்', ‘மாமியார் வீடு', ‘பெற்றெடுத்த பிள்ளை', ‘பொண்டாட்டியே தெய்வம்', ‘நட்புக்காக', ‘படையப்பா', ‘ரன்', ‘மாரீசன்' என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துவருகிறார்.

52 வயதாகும் சித்தாரா திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே உள்ளார். இதன் பின்னணியில் சொல்லப்படாத காதல் கதை ஒன்று இருக்கிறதாம்.

தனது தந்தை இறந்த பிறகு குடும்ப பொறுப்புகளை ஏற்ற சித்தாராவுக்கு, ஒரு காதலும் இருந்திருக்கிறது. மனதுக்கு நெருக்கமான அந்த காதல் கைகூடாததால் விரக்தியில் திருமணம் வேண்டாம் என்ற முடிவை அவர் எடுத்ததாகவும், அதன்படியே இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

1 More update

Next Story