நகைச்சுவை கதாபாத்திரத்தில் இனி நடிப்பேனா? - சூரி விளக்கம்


நகைச்சுவை கதாபாத்திரத்தில் இனி நடிப்பேனா? - சூரி விளக்கம்
x

கதையின் நாயகனாக நடிப்பதில் மட்டுமே திட்டவட்டமாக இருக்கிறேன் என்று சூரி தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியவர் நடிகர் சூரி. அவர் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் வருகிற 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

இதற்கிடையில் இனி கதாநாயகனாக மட்டுமே நடிக்கப்போவதாக சூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "எனக்கு யாருடனும் போட்டி கிடையாது. ஒரு கட்டத்தை தாண்டி வந்துவிட்டேன். இனி மீண்டும் அந்த பாதைக்கு செல்வது கடினம். அப்படி நடித்தாலும்கூட, அந்த கதாபாத்திரம் வலிமையானதாகவும், என்னை மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக கொண்டு செல்லும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும்.

இனி பத்தோடு பதினொன்றாக என்னால் இருக்க முடியாது. 'என்னை தேடி வந்து அழைக்கிறார்களே, கண்டிப்பாக இவர்களுக்கு ஒரு படம் நடித்து கொடுத்துவிட வேண்டும்' என்ற எண்ணத்தில் இனி என்னால் நடிக்க முடியாது. அப்படி சென்றால், என்னை கதைநாயகனாக வைத்து படம் எடுக்க வரும் இயக்குனர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? கதையின் நாயகனாக நடிப்பதில் மட்டுமே திட்டவட்டமாக இருக்கிறேன்" என்று கூறினார்.

1 More update

Related Tags :
Next Story