’தி ராஜா சாப்’ மூலம் கம்பேக் கொடுப்பாரா நிதி அகர்வால்?

ராஜா சாப் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
Will Nidhi Agarwal make a comeback with 'The Raja Saab'?
Published on

சென்னை,

முன்னா மைக்கேல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிதி அகர்வால். பின்னர் சவ்யசாச்சி மூலம் தெலுங்கில் நுழைந்த அவர் தொடர்ச்சியாக மிஸ்டர் மஜ்னு மற்றும் இஸ்மார்ட் சங்கர் போன்ற படங்களில் நடித்தார்.

இதில் இஸ்மார்ட் சங்கர் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதில் கூட இரண்டு கதாநாயகிகள். எனவே அவருக்கு தனி கதாநாயகியாக ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை.

இஸ்மார்ட் சங்கருக்குப் பிறகு, ஈஸ்வரன் மற்றும் பூமி என இரண்டு தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். ஆனால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. பிறகு பல எதிர்பார்ப்புகளுடன், நிதி அகர்வால், பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஹரி ஹர வீரமல்லுவில் நடித்தார். ஆனால் அதுவும் தோல்வியடைந்தது.

இதனால், நிதி அகர்வால் கம்பேக் படத்திற்காக காத்திருக்கிறார். அவர் தற்போது ராஜா சாப் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 10-ம் தேதி தமிழிலும் மற்ற மொழிகளில் 9-ம் தேதியும் வெளியாகிறது. இந்த படம் நிதி அகர்வாலுக்கு  கம்பேக் படமாக இருக்குமா? என்பதை பொருத்திருந்து பார்போம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com