'ஜனநாயகன்' படத்துடன் மோதுமா 'பராசக்தி'?- இயக்குனர் சுதா கொங்கரா பதில்


Will Parashakti compete with Jana Nayagan?- Director Sudha Kongara answers
x

இயக்குனர் சுதா கொங்கரா, ’பராசக்தி’ பட அப்டேட் கொடுத்தார்.

சென்னை,

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சுதா கொங்கரா, 'பராசக்தி' பட அப்டேட் கொடுத்தார். அவர் கூறுகையில்,

'"பராசக்தி' படத்தில் இன்னும் 40 நாட்களுக்கான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது 'மதராஸி' படப்பிடிப்பில் இருப்பதால் அவர் திரும்பியதும் படப்பிடிப்பை தொடர்வோம்.

பராசக்தி படம் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துடன் மோதும் என்று நாங்கள் சோல்லவே இல்லை. அறிவிக்கவே இல்லை. ரிலீஸ் முடிவை தயாரிப்பாளர்கள் எடுப்பார்கள்' என்றார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பராசக்தி'. இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, லீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

1 More update

Next Story