அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் 3 கதாநாயகிகளா?


Will there be 3 heroines in the Allu Arjun-Atlee film?
x

அட்லீ இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க மூன்று பாலிவுட் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்க உள்ளதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, சமந்தா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அட்லீ இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க ஜான்வி கபூர், திஷா பதானி மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகிய மூன்று பாலிவுட் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், ஜான்வி கபூர் முக்கிய கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

1 More update

Next Story