தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொள்வீர்களா? - விஷால் அளித்த சுவாரஸ்ய பதில்


தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொள்வீர்களா? - விஷால் அளித்த சுவாரஸ்ய பதில்
x
தினத்தந்தி 21 Oct 2024 8:26 AM IST (Updated: 24 Oct 2024 1:12 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஷாலிடம், புதிதாக கட்சி துவங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,

'ஓட்டு போடுகிறோம், புது அரசியல்வாதி வருகிறார் அவர் என்ன பண்ண போகிறார் என்பதை பார்க்க வேண்டும் அல்லவா. ஒரு வாக்காளரா, அவர் என்ன சொல்ல போகிறார், மக்களுக்கு என்ன பண்ண போகிறார், இப்போதுள்ள அரசியல்வாதிகளை விட அவர் என்ன நல்லது செய்ய போகிறார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் மத்தியில் நானும் ஒருவராக நின்று பார்ப்பேன்.

இதற்கு எதற்கு அழைப்பு. எங்கையாவது ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். அதை ஏன் தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும், நேரில் பார்த்தால் நல்லது தானே' என்றார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 More update

Next Story