'அவருடன் பணிபுரிந்தது எனக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது - ஹிருத்திக் ரோஷன்

’வார் 2’ படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார்.
சென்னை,
பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் தற்போது அயன் முகர்ஜி இயக்கத்தில் 'வார் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடம் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாகிறது. அதே நாளில்தான், ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படம் வெளியாகிறது. இதனால், இவ்விறு படங்கள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஜூனியர் என்.டி.ஆருடன் பணிபுரிந்தது தனக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாக ஹிருத்திக் ரோஷன் கூறி இருக்கிறார்.
Related Tags :
Next Story






