ஓடிடியில் வெளியாகும் ''டி.என்.ஏ''.. எதில், எப்போது பார்க்கலாம்?

அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘டி.என்.ஏ’ படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் ''டி.என்.ஏ''.. எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

சென்னை,

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'டி.என்.ஏ' . இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.

மேலும், இதில் போஸ் வெங்கட், ரமேஷ் திலக், ரித்விகா, பாலாஜி சக்திவேல், விஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியசமான கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி.என்.ஏ படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற 19ந் தேதி வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com