ஓடிடிக்கு வரும் சோனம் பஜ்வாவின் காதல் படம் - எங்கு, எப்போது பார்க்கலாம்?


Ek Deewane Ki Deewaniyat OTT release: Heres when and where you can watch the Harshvardhan Rane and Son
x

தற்போது நடிகை சோனம் பஜ்வா பாலிவுட் படங்களில் பிஸியாக உள்ளார்.

சென்னை,

கோலிவுட்டில் பிரபல நடிகர் வைபவ் உடன் இணைந்து கப்பல், காட்டேரி படங்களில் நடித்தவர் நடிகை சோனம் பஜ்வா.

பஞ்சாபிய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல நடிகையாக வலம் வரும் சோனம் பஜ்வாவுக்கு பஞ்சாபிய மொழி ரசிகர்கள் தாண்டியும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அவருக்கு பல மொழி சினிமா துறைகளிலும் ரசிகர்கள் உண்டு.

தற்போது நடிகை சோனம் பஜ்வா பாலிவுட் படங்களில் பிஸியாக உள்ளார். அதன்படி, அவர் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வந்த படம் 'ஏக் தீவானே கி தீவானியாத்'.

திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த கால் படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி, இப்படம் நாளை முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

1 More update

Next Story