ஓடிடியில் வெளியாகும் ''மார்கன்''.. எதில், எப்போது பார்க்கலாம்?

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் ''மார்கன்''.. எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் 'மார்கன்' படத்தில் நடித்துள்ளார்.

'மார்கன்' படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா என பலரும் நடித்துள்ளனர். உலகளவில் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மார்கன் படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதாவது, மார்கன் படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வருகிற 25ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com