முடங்கிய நெட்பிளிக்ஸ் - 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' ரசிகர்கள் அதிருப்தி

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்-ன் 5வது சீசனின் முதல் எபிசோடு இந்தியாவில் நேற்று வெளியானது.
Netflix went down for some viewers after Stranger Things premiered
Published on

சென்னை,

முதல் சீசனிலிருந்தே உலகம் முழுவதையும் மயக்கி கட்டிப்போட்ட ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்-ன் 5வது சீசனின் முதல் எபிசோடு உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆன நேரத்தில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளமே முடங்கியதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. தற்போது டான் டிராட்சன்பெர்க் இயக்கத்தில் 5-வது சீசன் உருவாகி இருக்கிறது. இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும்.

மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்தன் முதல் எபிசோடு இந்தியாவில் நேற்று வெளியானது. 2வது எபிசோட் டிசம்பர் 25-ம் தேதியும், இறுதி எபிசோட் டிசம்பர் 31-ம் தேதியும் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com