ஓ.டி.டி.யில் வெளியாகும் 'மதுரை பையனும் சென்னை பொண்ணும்' புதிய வெப்தொடர்


ஓ.டி.டி.யில் வெளியாகும் மதுரை பையனும் சென்னை பொண்ணும் புதிய வெப்தொடர்
x

இந்த வெப்தொடர் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

சில நாட்களுக்கு முன் சென்னையில் பெரும்பாலான இடங்களில் சென்னை பொண்ணுக்கு காதலிக்க மதுரை பையன் தேவை என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அது எதற்கான விளம்பரமாக இருக்கும் என மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது, அதற்கான விடையை வெளியாகியுள்ளது.

அதாவது, இது ஒரு புதிய வெப் தொடராகும். இந்த வெப் தொடர் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தில் வெளியாக உள்ளது. இந்த தொடருக்கு 'மதுரை பையனும் சென்னை பொண்ணும்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரபல தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சஞ்சய் தயாரித்துள்ள இந்த வெப்தொடரை விக்னேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார். இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சசிகுமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்களின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.


Next Story