"படை தலைவன்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

சண்முக பாண்டியன் நடித்துள்ள "படை தலைவன்" திரைப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
"படை தலைவன்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
Published on

சென்னை,

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த மாதம் 13-ந் தேதி வெளியான படம் 'படைத்தலைவன்'. இந்த படத்தினை இயக்குனர் அன்பு இயக்கியுள்ளார். டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்த்தை கொண்டுவந்துள்ளனர். விஜயகாந்த் வரும் காட்சிக்கு திரையரங்கில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

படை தலைவன் படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com