காமன்வெல்த் பேட்மிண்டன் :இந்தியாவின் லக்‌ஷயா சென், ஆகர்ஷி காஷ்யப் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


காமன்வெல்த் பேட்மிண்டன் :இந்தியாவின் லக்‌ஷயா சென், ஆகர்ஷி காஷ்யப்  காலிறுதி  சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : PTI 

காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 26 பதக்கங்களை வென்றுள்ளது

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 26 பதக்கங்களை வென்றுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் ஆஸ்திரேலியாவின் யிங் சியாங் ஆகியோர் மோதினர் .இந்த ஆட்டத்தில் லக்‌ஷயா சென் 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் இதனால் காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் சைப்ரஸின் இவாவை எதிர்த்து விளையாடினார் .இந்த ஆட்டத்தில் ஆகர்ஷி காஷ்யப் 21-2, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் .இதனால் அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.


Next Story