காமன்வெல்த்: பதக்க வேட்டையில் இந்தியா- மும்முறை தாண்டுதலில் எல்தோஷ் பால் தங்கம் வென்றார்


காமன்வெல்த்: பதக்க வேட்டையில் இந்தியா- மும்முறை தாண்டுதலில் எல்தோஷ் பால் தங்கம் வென்றார்
x

Image Courtesy : @Media_SAI

இதே போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்றுள்ளது.

10-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் எல்டோஸ் பால் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்திய அணியின் (16 தங்கம் , 12 வெள்ளி, 17 வெண்கலம்) பதக்க எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. காமன்வெல்த் போட்டி இறுதி கட்டத்தில் இந்திய அணியின் பதக்க வேட்டை தொடர்கிறது.


Next Story