காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிஸில் 3-0 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி


காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிஸில் 3-0 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி
x

image tweeted by @FirstpostSports

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.

இதில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் மற்றொரு போட்டியான லான் பவுல்ஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தனியா சௌத்ரி 21-10 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் டீ ஹோகனிடம் தோல்வியை தழுவி ஏமாற்றமளித்தார்.


Next Story