காமன்வெல்த் போட்டி: 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி..!


காமன்வெல்த் போட்டி: 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி..!
x
தினத்தந்தி 6 Aug 2022 12:05 PM GMT (Updated: 6 Aug 2022 12:14 PM GMT)

காமன்வெல்த் போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் வெள்ளி வென்றுள்ளார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் 43.38 நிமிடத்தில் இலக்கை அடைந்து இந்தியா வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் வெள்ளி வென்றுள்ளார். 8.11 நிமிடங்களில் இலக்கை அடைந்த அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

இந்தியா தற்போது 9 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 28 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.


Next Story