காமன்வெல்த் நீச்சல் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்


காமன்வெல்த் நீச்சல் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்
x

50 மீட்டர் நீச்சல் போட்டியின் அரை இறுதி சுற்றில், இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார்.

லண்டன்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில் ஆடவருக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியின் அரை இறுதி சுற்றில், இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார். இவர் 50 மீட்டர் தூரத்தை 25.38 வினாடிகளில் கடந்துள்ளார். ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில், இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட இறுதிச்சுற்றுகளுக்குள் நுழைந்த முதல் இந்திய நீச்சல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.


Next Story