காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி : இந்தியாவின் விகாஸ் தாக்கூர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்..!


காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி : இந்தியாவின் விகாஸ் தாக்கூர் வெள்ளிப்பதக்கம்  வென்று அசத்தல்..!
x
தினத்தந்தி 2 Aug 2022 3:27 PM GMT (Updated: 2 Aug 2022 3:31 PM GMT)

இந்தியாவின் விகாஸ் தாக்கூர் மொத்தம் 346 கிலோ தூக்கி 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார்

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆண்களுக்கான பளுதூக்குதலின் (96 கிலோ) இறுதி போட்டி இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் விகாஸ் தாக்கூர் ,. இப்போட்டியில் மொத்தம் 346 கிலோ தூக்கி 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 155 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 191 கிலோவும் தூக்கினார்.

வெள்ளி பதக்கம் வென்ற விகாஸ் தாக்கூர்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Next Story