காமன்வெல்த் மகளிர் ஆக்கி : இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது இந்தியா


காமன்வெல்த் மகளிர் ஆக்கி : இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது இந்தியா
x

Image Courtesy : Twitter @TheHockeyIndia

இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று நடந்த மகளிர் ஆக்கி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தியா தனது முதல் 2 ஆட்டங்களில் கானா,வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது. இதனால் ஹாட்ரிக் வெற்றி முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியது.

ஆனால் இன்று இங்கிலாந்து வீராங்கனைகளின் வேகத்துக்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story