காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : முதல் சுற்றில் ஷரத் கமல்- ஸ்ரீஜா அகுலா இணை வெற்றி


காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : முதல் சுற்றில் ஷரத் கமல்- ஸ்ரீஜா அகுலா இணை வெற்றி
x

Image Courtesy : Twitter @Media_SAI

முன்னதாக நடைபெற்ற போட்டியில் சத்யன் - மணிகா பத்ரா இணை முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் - மணிகா பத்ரா இணை முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

அதே போல கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த மற்றொரு தொடக்க சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரர் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா வடக்கு அயர்லாந்தின் ஓவன் கேத்கார்ட் - சோஃபி எர்லி இணையுடன் மோதினர். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய இணை கமல்-ஸ்ரீஜா 11-7, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

1 More update

Next Story