காமன்வெல்த்: இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை? புள்ளிப்பட்டியலில் எந்த இடம்? - விவரம்


காமன்வெல்த்: இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை? புள்ளிப்பட்டியலில் எந்த இடம்? - விவரம்
x
தினத்தந்தி 3 Aug 2022 3:18 AM GMT (Updated: 3 Aug 2022 4:25 AM GMT)

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

லண்டன்,

22-வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 77 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் போட்டிகள் வரும் 8-ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 42 தங்கம், 32 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 106 பதக்கங்களை வென்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 6-வது இடத்தில் உள்ளது. 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இந்திய அணி வெற்றிபெற்ற விளையாட்டுகள், மற்றும் வென்ற பதக்கங்கள் விவரம்;

பேட்மிண்டன் கலப்பு பிரிவு - 1 வெள்ளி

ஜூடோ - 1 வெள்ளி, 1 வெண்கலம்

லான் பவுல்ஸ் மற்றும் பாரா லான் பவுல்ஸ் - 1 தங்கம்

டேபிள் டென்னிஸ் பாரா டேபிள் டென்னிஸ் - 1 தங்கம்

பளு தூக்குதல் - 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்


Next Story