மினுமினுக்கும் 'ஜரி' சேலைகள்


மினுமினுக்கும் ஜரி சேலைகள்
x
தினத்தந்தி 15 Jan 2023 1:30 AM GMT (Updated: 15 Jan 2023 1:31 AM GMT)

கண்களைக் கவரும் இளஞ்சிவப்பு, வெளிர் ஊதா, பழுப்பு, வெளிர் மஞ்சள் போன்ற வண்ணங்களிலும் பேன்சி ஜரிகைகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.

ந்திய பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் பாரம்பரியமான பட்டுச் சேலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இவற்றில் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட 'ஜரிகை வேலைப்பாடுகள்' பிரபலமானவை. மதிப்பு கூட்டும் வகையில் தங்கத்துடன் வெள்ளி ஜரிகையும், வெள்ளியுடன் செம்பு ஜரிகையும் கலந்து நெய்யும்போது, பட்டு ஜரிகையில் புதுவிதமான வண்ணம் கிடைக்கும்.

இந்த வண்ணங்கள், பார்ப்பவர்களின் கண்களைக் கவரும். இளஞ்சிவப்பு, வெளிர் ஊதா, பழுப்பு, வெளிர் மஞ்சள் போன்ற வண்ணங்களிலும் பேன்சி ஜரிகைகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. அவற்றை பொருத்தமான நிறங்கள் கொண்ட காம்போ சேலைகளுடன் இணைக்கும்போது அழகு அதிகரிக்கும். அவ்வாறு தயாரிக்கப்பட்ட அழகிய சேலைகள் இங்கே...


Next Story