தாவரங்களையும் நகைகளாக அணியலாம்


தாவரங்களையும் நகைகளாக அணியலாம்
x
தினத்தந்தி 19 Feb 2023 1:30 AM GMT (Updated: 19 Feb 2023 1:31 AM GMT)

கற்பனையும், படைப்பாற்றலும் சேர்ந்ததால் சின்ன சின்ன தாவரங்களையே நகைகளாக வடிவமைக்கும் டிரெண்டு தற்போது பிரபலமாகி வருகிறது. இளைய தலைமுறையினர் இந்த நகைகளை விரும்பி அணிகின்றனர்.

ங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் மற்றும் பலவகையான பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த நகைகள், தற்போது மற்றொரு பரிமாணத்தில் பளிச்சிடுகின்றன. கற்பனையும், படைப்பாற்றலும் சேர்ந்ததால் சின்ன சின்ன தாவரங்களையே நகைகளாக வடிவமைக்கும் டிரெண்டு தற்போது பிரபலமாகி வருகிறது. இளைய தலைமுறையினர் இந்த நகைகளை விரும்பி அணிகின்றனர். காக்டஸ், சக்குலண்ட், ஏர் பிளாண்ட்ஸ் போன்ற தாவரங்களை இதற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் மனதில் உற்சாகமும், நேர்மறை எண்ணமும் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றனர். தாவர நகைகளின் தொகுப்பு இங்கே...


Next Story