கவனத்தை ஈர்க்கும் 'ஜிக்ஜாக்' நகைகள்


கவனத்தை ஈர்க்கும் ஜிக்ஜாக் நகைகள்
x
தினத்தந்தி 16 July 2023 7:00 AM IST (Updated: 16 July 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், பிளாஸ்டிக், மரப்பலகை உள்பட பல்வேறு மூலப்பொருட்கள் கொண்டு ஜிக்ஜாக் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து வகையான உடைகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்றபடி இருப்பதால், ஜிக்ஜாக் நகைகள் இளம்பெண்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

மின்னலின் ஒளியைப்போல, முன்னும் பின்னுமான கோடுகளின் வடிவமைப்பைக் கொண்டு தயாரிக்கப்படுபவையே 'ஜிக்ஜாக்' நகைகள். குறுக்கு நெடுக்குமான கோடுகள்தான் இந்த நகைகளின் தனித்துவம். இந்தக் கோடுகள் வாழ்க்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆன்ம சக்தியின் அடையாளத்தைக் குறிக்கும்.

'எந்தவொரு சிந்தனையோ, செயலோ ஆரம்பத்தில் பல கோணத்தில் சென்றாலும், மீண்டும் இயல்பு நிலையையே வந்தடையும்' என்பதே ஜிக்ஜாக் கோடுகள் உணர்த்தும் தத்துவமாகும். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், பிளாஸ்டிக், மரப்பலகை உள்பட பல்வேறு மூலப்பொருட்கள் கொண்டு ஜிக்ஜாக் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து வகையான உடைகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்றபடி இருப்பதால், ஜிக்ஜாக் நகைகள் இளம்பெண்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றில் சில...

1 More update

Next Story