உலக காற்று தினம்
உலக அளவில், காற்று மூலம் அதிக அளவில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம், உலக அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங் களின் பட்டியலில், இந்தியாவின் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.
அனைத்து உயிர்களின் வாழ்வியல் அடிப்படை காற்று. உணவும், நீரும் இல்லாமல் கூட மனிதனால் குறிப்பிட்ட காலம் வரை வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் சில வினாடிகள் கூட வாழ முடியாது. இத்தகைய மகத்துவம் மிக்க காற்றை ெதாழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி போன்ற காரணங்களால் தொடர்ந்து மாசுபடுத்தி வருகிறோம். இதை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும் வேண்டும்.
ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும், காற்றின் ஆற்றலை கொண்டாடும் விதமாகவும், காற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15-ந் தேதியை 'உலக காற்று தினமாக' கொண்டாடி வருகிறது.
உலக அளவில், காற்று மூலம் அதிக அளவில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம், உலக அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங் களின் பட்டியலில், இந்தியாவின் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, சுவாசிப்பதற்காக தூய காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
இத்தகைய நிலையை தடுக்க காற்றை மாசுபடுத்தும் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். வாகனங்களில் அவ்வப்போது புகைக் கருவியை சரிபார்த்து சீர் செய்ய வேண்டும். வருடத்துக்கு ஒரு மரம் நட்டு பராமரிக்க வேண்டும். உணவு, உடை, உறைவிடம் போல தூய்மையான காற்றும் அனைவரின் உரிமையாகும்.