நினைவாற்றலை அதிகரிக்கும் காதுகுத்தும் பாரம்பரியம்


நினைவாற்றலை அதிகரிக்கும் காதுகுத்தும் பாரம்பரியம்
x
தினத்தந்தி 23 May 2022 5:30 AM GMT (Updated: 23 May 2022 5:31 AM GMT)

பசியைத் தூண்டும் புள்ளிகள் காதில் இருக்கின்றன. இதன் மூலம் செரிமானத்தின் செயல்பாடுகள் சீராகி நன்றாக பசி எடுக்கும்.

குழந்தைகளுக்கு, காது குத்தி கம்மல் அணிவிக்கும் வழக்கம் பெரும்பாலானவர்களின் குடும்பங்களில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. ஆன்மிக ரீதியாக இதற்கு சில காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இதில் பல நன்மைகள் உள்ளன. அதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

1. காதில் கம்மல் அணியும் பகுதியில் இருக்கும் 'மெரிடியன் புள்ளி' மூளையிலுள்ள இடது எம்மிஸ்பியர் பக்கத்தை, வலது பக்கத்தோடு இணைப்பதற்கு உதவுகிறது. அந்த இடத்தில் காது குத்துவதால், மூளையின் செயல்திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கிறது. இதனால்தான் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே காது குத்துகிறார்கள்.

2. காது குத்துவதன் மூலம் ஆற்றல் சரிசமமாக உடல் முழுவதும் பரவுகிறது. இடது காதில் உள்ள புள்ளி தூண்டப்படுவதால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும். அதேபோல பெண்

களுக்கு குழந்தை பிறக்கும்போது ஏற்படும் வலியையும், இந்தப் புள்ளியைத் தூண்டுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

3. இரண்டு காதையும் குத்துவதனால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் வலி குறைகிறது. அதனால் தான் பெண்கள் தங்கள் இரண்டு காதுகளிலும் கம்மல் அணியும்படி, பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

4. பசியைத் தூண்டும் புள்ளிகள் காதில் இருக்கின்றன. இதன் மூலம் செரிமானத்தின் செயல்பாடுகள் சீராகி நன்றாக பசி எடுக்கும்.

5. காது குத்துதல் ஒட்டு மொத்த உடலின் உயிர் சக்தியையும் மேம்படுத்துகிறது.

6. காது மடல் என்னுமிடத்தில் கண் பார்வையின் இணைப்பு புள்ளி இருக்கிறது. அந்த இடத்தில் காது குத்துவதால் பார்வைத்திறன் மேம்படுகிறது.

7. காது குத்துவதன் மூலம், உடலில் சீராக ரத்த ஓட்டம் பராமரிக்கப்படுகிறது. இதனால் சரியான விகிதத்தில் மூளைக்கு ரத்தம் பாய்கிறது. மூளையின் உகந்த செயல்பாடு, மன

ஆற்றலையும், மனநலத்தையும் காக்கிறது.

8. பெண்கள் காது குத்துவதால் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு தீர்வு காண முடியும்.

9. உணர்வு மற்றும் பெருமூளை புள்ளிகள் காது கேட்கும் தன்மையை பராமரிக்கின்றன. அந்த இடத்தில் காது குத்துவதனால் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

10. காது குத்துதல், பதற்றம் மற்றும் கவலையைக் கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நமது முன்னோர்கள் காது குத்துவதை, பாரம்பரியத்திற்காக மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பின்பற்றினார்கள் என்பதை மேற்கண்ட நன்மைகளால் அறியமுடிகிறது.


Next Story