நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மின்சாதனங்களை இயக்குகிறீர்களா?


நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மின்சாதனங்களை இயக்குகிறீர்களா?
x
தினத்தந்தி 4 Dec 2022 1:30 AM GMT (Updated: 4 Dec 2022 1:30 AM GMT)

நீண்ட நாட்கள் வெளியூர் செல்லும்போது முடிந்தவரை குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களை நிரப்பாமல் இருப்பது சிறந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு மின்சாதனப் பொருட் களைப் பயன்படுத்தும் போது முதலில் அதன் இயக்கத்தைச் சரிபார்க்க வேண்டும்.

வெளியூர் பயணத்தின் காரணமாக நீண்ட நாட்கள் வீட்டில் இல்லாதபோது, மின்சாதனங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதுண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவற்றை மீண்டும் இயக்கும்போது கவனம் தேவை. இதற்கு எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

வெளியூர்களுக்குச் செல்லும் நாட்களில் டி.வி., கணினி சார்ந்த உபகரணங்கள், சலவை இயந்திரம், கேம் கன்சோல்கள், மின்விசிறி, விளக்குகள், ஏ.சி. ஆகியவற்றின் இணைப்பைக் கட்டாயம் துண்டிக்க வேண்டும்.

மின்சாரம் இல்லாதபோது, அவற்றை சரிவர அணைக்காமல் சென்றாலோ, மின்னழுத்த வேறுபாட்டாலோ அவை தானாக இயங்கி விபத்தை உண்டாக்கலாம். எனவே, இணைப்பை சரியாக துண்டித்துள்ளோமா, சுவிட்சுகளை அணைத்துள்ளோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியம்.

மின்னழுத்த ஏற்றத்தாழ்வு காரணமாக மின் உபகரணங்கள் எளிதில் பழுதடைய வாய்ப்புள்ளது. அவற்றால் ஏதேனும் விபத்து ஏற்படும்போது, அதை உடனடியாக தெரிவிக்கும் அலாரங்களைப் பொருத்தலாம். இதனால், பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதில் மேற்கொள்ள முடியும். நாம் வீட்டில் இல்லாத சமயங்களிலும் இது உபயோகமாக இருக்கும்.

நீண்ட நாட்கள் வெளியூர் செல்லும்போது முடிந்தவரை குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களை நிரப்பாமல் இருப்பது சிறந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு மின்சாதனப் பொருட் களைப் பயன்படுத்தும் போது முதலில் அதன் இயக்கத்தைச் சரிபார்க்க வேண்டும். மின் கசிவு, பழுது உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்த பின்பே உபயோகிக்கத் தொடங்க வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டி, ஏ.சி. உள்ளிட்ட பொருட்களை இயக்கும்போது, அதில் இருந்து வாயு கசிகிறதா? என்று பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக, குளிர்சாதனப் பெட்டியை இயக்குவதற்கு முன்பு மின்சாதன பழுது பார்ப்பவர் மூலம் சோதித்துக்கொள்வது நல்லது.


Next Story