திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் புதிதாக பிரம்மாண்ட வேல்


திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் புதிதாக பிரம்மாண்ட வேல்
x

திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் காட்சித்தரும் 40 அடி உயரம் கொண்ட முருகனின் வேல் புதிதாக மாற்றப்படுகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மற்றும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவிலின் ராஜகோபுரத்தில், விரைவில் புதிய வேல் அமைக்கப்பட இருக்கிறது. திருச்செந்தூர் கோவிலில் ஜூலை மாதம் 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ராஜகோபுரத்தில் காட்சித்தரும் 40 அடி உயரம் கொண்ட முருகனின் வேல் புதிதாக மாற்றப்படுகிறது.

இதற்காக, நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட வேல் கொண்டு வரப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தில் பணிகள் நிறைவடைந்த உடன், மின் விளக்குகளால் ஒளிரும் இந்த பிரம்மாண்ட வேல் பொருத்தப்பட உள்ளது.


Next Story