இந்த வார விசேஷங்கள்: 18-2-2025 முதல் 24-2-2025 வரை

சங்கரன்கோவிலில் 21-ம் தேதி கோமதியம்மன் தங்கப் பாவாடை அலங்காரத்தில் தரிசனம்.
18-ந்தேதி (செவ்வாய்)
* கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா.
* சுவாமிமலை முருகப்பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
19-ந்தேதி (புதன்)
* ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.
* ராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவனி வரும் காட்சி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நான்.
20-ந்தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
21-ந்தேதி (வெள்ளி)
* திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (சனி)
* ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.
* வேதாரண்யம் சிவபெருமான் விழா தொடக்கம்.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
23-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (திங்கள்)
* சர்வ ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.