இந்த வார விசேஷங்கள்: 28-1-2025 முதல் 3-2-2025 வரை


இந்த வார விசேஷங்கள்: 28-1-2025 முதல் 3-2-2025 வரை
x

திருப்பதி திருமலையில் நாளை மறுநாள் ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

28-ந்தேதி (செவ்வாய்)

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் இரவு யானை வாகனத்தில் புறப்பாடு.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

* கீழ்நோக்கு நாள்.

29-ந்தேதி (புதன்)

* தை அமாவாசை.

* மதுரை மீனாட்சி அம்மன், வைர கிரீடம் சாற்றியருளிய காட்சி.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திரு விழா தொடக்கம்.

* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

30-ந்தேதி (வியாழன்)

* திருவாவடுதுறை, திருமொச்சியூர் தலங்களில் சிவபெருமான் பவனி.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

31-ந்தேதி (வெள்ளி)

* முகூர்த்த நாள்.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தெப்ப உற்சவம் ஆரம்பம்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

1-ந்தேதி (சனி)

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் காலை தங்கச் சப்பரத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி

* சூரியனார்கோவிலில் சிவபெருமான் திருவீதி உலா.

* திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* சதுர்த்தி விரதம்.

* கழுகுமலை முருகப்பெருமான், திருவிடைமருதூர் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

* மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.

* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் விழா தொடக்கம்.

* மேல்நோக்கு நாள்.

3-ந்தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* சஷ்டி விரதம்.

* திருப்புடைமருதூர் சிவபெருமான் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் பவனி.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வீதி உலா.

* சமநோக்கு நாள்.

1 More update

Next Story