திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு


திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2025 7:30 AM IST (Updated: 7 Jun 2025 7:31 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்தநிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 10-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மதியம் 12.32 மணிக்கு தொடங்கி மறுநாள் 11-ந் தேதி(புதன்கிழமை) மதியம் 1.58 மணிக்கு நிறைவடைகிறது.

பவுர்ணமிக்கு முந்தைய நாள் 9-ந்தேதி வைகாசி விசாகம் என்பதால் அன்றைய தினத்தில் இருந்தே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் கிரிவலம் செல்ல வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story